பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு பிறகு தனது ஆளில்லா டாக்சி சேவையை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில நகரான ஆஸ்டினில் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.டெஸ்லாவின் மாடல் Y காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு ரோபோடாக்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சமூக வலைதள இன்புளூயன்சர்கள் மற்றும் சிலர் தேர்த்தெடுக்கப்பட்டு அவர்கள் ரோபோடாக்சியில் பயணித்து வருகின்றனர். காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை இந்த சேவை நடத்தப்படும் எனவும் பயணத்திற்கு 4 புள்ளி 20 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் டெஸ்லா தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள் : குபேரா மூன்று நாட்களில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி சாதனை..