சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராயல் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட பாரிசின் The Louvre museum இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மீண்டும் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வந்து செல்லும் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்ட உடன் வெறும் ஏழே நிமிடங்களில் அரிதான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளையில் நான்கு பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களின் விரல் ரேகைகளை வைத்து விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் தனது மனைவியான பேரரசி மேரி லூசிக்கு பரிசளித்த 2000 வைரங்கள் அடங்கிய நெக்லசும் திருடப்பட்டது.