மொரிஷியஸ் நாட்டில் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் வெளியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் முடியும் வரை அங்கு சமூக வலைதளங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தடை தேர்தல் முடிந்த மறுநாளான நவம்பர் 11ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.