பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரத்தை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த நகரம் பசிபிக் கடற்கரை கலாச்சாரங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசானில் உள்ளவற்றுடன் இணைக்கும் வர்த்தக மையமாக செயல்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த நகரம் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ஆரம்பகால நாகரிகங்களின் அதே காலத்தில் செழித்து வளர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெனிகோ என்று பெயரிடப்பட்ட இந்த நகர்ப்புற மையம் வடக்கு பாரான்கா மாகாணத்தில் அமைந்துள்ளது.