உக்ரைனுக்கு எதிர்காலத்தில் ஆயுதங்கள் வழங்குவதை குறித்த விவரங்களை வெளியிடுவதை நிறுத்த ஜெர்மன் அரசு முடிவெடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்ற ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ராணுவ உதவி குறித்து விவரங்களை ஜெர்மன் அரசு வெளியிடாது என்றும், ஆயுத விநியோகங்கள், ஆயுத அமைப்புகள் குறித்த தகவல்கள் பொது வெளியில் வெளியிடப்படாது என்றும் கூறினார்.