திபெத்திய புத்த மதத்தின் அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில், திபெத்தை முன்னிறுத்தி இந்தியா தலையிடக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது. அதையும் மீறி தலையிட்டால் வளர்ச்சிக்கான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.