உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படாவிட்டால் அதனை மத்தியஸ்தம் செய்யும் முயற்சி கைவிடப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் உக்ரைன் தலைவர்களை சந்தித்து பேசிய மார்கோ ரூபியோ, உக்ரைன் - ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் டிரம்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு முன்னுரிமை அளிக்க கூடிய பணிகள் உள்ளதால், ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முன்னேற்றம் இல்லாவிட்டால் விரைவில் அதற்கான முயற்சிகளை அமெரிக்கா கைவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.