வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்பின் மீது காரால் மோதிய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் இருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்படைந்தனர். இரவு பத்தரை மணி அளவில் வெள்ளைமாளிகையின் கிழக்கு முனையில் உள்ள பாதுகாப்பு தடுப்பின் மீது மேரிலாண்டில் பதிவு செய்யப்பட்ட அக்குரா கார் மோதியது. உடனடியாக காரை ஒட்டி வந்த நபரை கைது செய்த அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள், காரை சோதனை செய்த போது அச்சுறுத்தும் வகையில் எதுவும் இல்லாதது கண்டு ஆசுவாசமடைந்தனர். கார் திட்டமிடப்பட்டு வெள்ளை மாளிகை கேட் மீது மோதியதா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என விசாரித்து வரும் பாதுகாப்பு அதிகாரிகள் காரோட்டி குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை.