கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வட கொரியா கிம் இல் சுங் சதுக்கத்தில் பிரமாண்ட் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதிபர் கிம் ஜாங் உன் உடன் சீனாவின் பிரதமர் Li Qiang மற்றும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெத்வதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. நாட்டின் ராணுவ பலம் மற்றும் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றிருந்ததாகவும் அவற்றில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அடங்கும் என செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் உலகப் போரின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சீனாவின் ராணுவ அணிவகுப்பில் கிம் கலந்து கொண்டார்.