தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான 77 ஆவது எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் Adolescence தொடர் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட ஆறு பிரிவுகளில் எம்மி விருது வென்றுள்ளது. இதேபோல் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை, துணை நடிகைக்கான விருதுகளை பிரபல காமெடி நாடகத் தொடரான Hacks வென்றுள்ளது. சிறந்த நாடக தொடருக்கான விருது The Pitt தொடருக்கும் அதில் நடித்திருந்த Noah Wyle முன்னணி நடிகருக்கான விருதை பெற்றார். சிறந்த பேச்சுத் தொடருக்கான விருதை CBS’ Late Show With Stephen Colbert வென்றது. The Penguin படத்தில் நடித்திருந்த Cristin Milioti முன்னணி நடிகைக்கான விருதை பெற்றார்.இதையும் படியுங்கள் : அடுத்த ஆண்டு போரை நடத்த ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும் உக்ரைனின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் பேட்டி