அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. வாஷிங்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் இசைக்கருவிகளை இசைத்தபடியும் துப்பாக்கியை ஏந்தியும் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். இராணுவ வாகனங்கள் மத்தியில் வீர நடை போட்ட நாய் ரோபோக்கள் மற்றும் வானை அலங்கரித்த கண்கவர் வாண வேடிக்கைகளை அதிபர் டிரம்ப், அவரது மனைவி உள்ளிட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.