அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்பிற்காக வாஷிங்டன் டி.சியில் உள்ள தெருக்களுக்கு டாங்கிகள் வந்து சேர்ந்தன. வரும் 14-ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவுடன் சேர்த்து அதிபர் டிரம்பின் 79 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வாஷிங்டனில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அணி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான டாங்கிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.