டெஸ்லா உருவாக்கி வரும் பறக்கும் காரின் டெமோவை, இந்தாண்டு இறுதிக்குள் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த டெமோ நிகழ்ச்சி, தயாரிப்பு வெளியீடு வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என எலான் மஸ்க் விவரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க்-யிடம், அவர் தயாரித்து வரும் பறக்கும் கார் குறித்து அதிகம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க எலான் மஸ்க் மறுத்து விட்டார்.