மாட்டிறைச்சி, காபி, வெப்பமண்டல பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த மேயர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதற்கு பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியே காரணம் என சொல்லப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை எளிதாக்குவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா எட்டியுள்ளதாக அறிவித்த டிரம்ப் பின்னர் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.