அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 58 வயதான ரியான் வெஸ்லி ரூத் என்ற நபரை மடக்கிப் பிடித்த காட்சியை அந்நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர். தனக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த அந்த நபர் பாதுகாவலரை நோக்கி சுட்டுவிட்டு தப்பினார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.