போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராக, அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ((போராட்டக் குழுவிலிருந்து பிரதிநிதிகள் பலருடன் ராணுவம் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து,)) இடைக்கால அரசுக்கு யாரை தலைமையேற்க செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றதாகவும், அப்போது, சுசீலா கார்கியின் பெயரை பெரும்பான்மையானோர் முன்மொழிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது தலைமையில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமையவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.