நேபாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளால் பிரதமர் பதவியில் இருந்து கே.பி. சர்மா ஒலி விலகியதை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. நேபாளத்தின் முன்னாள் ஜனாதிபதி பௌடெல், ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் நேபாளத்தின் மிக மோசமான எழுச்சியைத் தலைமை தாங்கிய GEN-Z போராட்டக்காரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் சுசீலா கார்கியை பிரதமராக நியமித்தது.