பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் 7 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில், பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்பட்டதில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.