சூடானில் உள்ள சவுதி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அந்நாட்டு துணை ராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 460 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசுக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சூடானில் நிலவும் உள்நாட்டு மோதலை தவிர்க்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.