ஈரான் மீதான தாக்குதல் நடத்தியதற்காக சொந்த நாட்டிலேயே அதிபர் டிரம்புக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஈரானுக்கு தொடர் எச்சரிக்கை விடுத்து வந்த அமெரிக்கா, திடீரென நேற்று மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தியது. இதற்கு உலக அரங்கில் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க மக்களே போருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல் கனடாவிலும் மக்கள் சாலைகளில் திரண்டு, டிரம்புக்கு எதிராகவும் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதையும் படியுங்கள் : ஈராக், சிரிய அமெரிக்க தளங்கள் விரைவில் தாக்கப்படலாம்..