இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் பேரணி சென்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை பாராட்டும் வகையிலும், நாட்டின் ராணுவத்தை ஆதரிக்கும் வகையிலும் இஸ்லாமாபாத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மற்றும் வாகன பேரணி நடத்தினர். இதே போல், சில இஸ்லாமிய மத அமைப்புகளும் இணைந்து நாட்டின் கொடிகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.