எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸின் 11ஆவது ஸ்டார்ஷிப் விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து ஏவப்பட்டது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் ஏவப்பட்டு சோதனை நடந்தது. இதனைதொடர்ந்து திட்டமிட்டப்படி மெக்சிகோவின் கடலில் ஸ்பிளாஷ் டவுன் முறையில் விண்கலம் இறக்கப்பட்டது.