வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் தென் கொரிய விமானப்படைகள் இணைந்து வான்வழி பயிற்சிகளை மேற்கொண்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் எஃப் -16 மற்றும் கேஎஃப் -16 போர் விமானங்கள் வானில் பறந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ளது.