புயல் மற்றும் கனமழையை தொடர்ந்து, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. நகரக்கூட முடியாத அளவிற்கு ஏராளமான வாகனங்கள் பனிப்பொழிலில் சிக்கிக் கிடக்கின்றன. காணும் இடமெல்லாம் வென்போர்வை போர்த்தியது போல் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடப்பதால் மக்கள் கடுங்குளிரில் நடுங்கி வருகின்றனர்.