ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகேரு இஷிபா நாடாளுமன்றத்தில் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். ஆளும் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவராக கடும் போட்டிக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட அவர் ஜப்பானின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 67 வயதான ஷிகேரு இஷிபா இதற்கு முன் ஜப்பானின் ராணுவ அமைச்சராக இருந்த அனுபவம் பெற்றவர் ஆவார்.