வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்ய கோரி இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வீட்டிற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.