அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ள சிறார் பாலியல் குற்றவாளி Jeffrey Epstein தொடர்பான அனைத்து கோப்புகளையும் பகிரங்கமாக வெளியிட உத்தரவிடும் மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டம் என்று அழைக்கப்படும் இந்த மசோதா, எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான விசாரணை குறித்த அனைத்து தகவல்களையும் 30 நாட்களுக்குள் வெளியிட நீதித்துறைக்கு உத்தரவிடுகிறது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஜனநாயகக் கட்சியினர் எப்ஸ்டீன் பிரச்சினையை ஆதரிப்பதாக குற்றம் சாட்டி, இந்த மசோதவிற்கு பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், தனது சொந்த கட்சி உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புகளை எதிர்கொண்ட பிறகு தனது போக்கை மாற்றிக் கொண்டார். இந்த மாசோதா பல்வேறு அரசியல், திரைப்பிரபலங்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.