30 பேருடன் சூயஸ் கால்வாயில் சென்ற எகிப்து எண்ணெய் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.