அமெரிக்க ஓபன் டென்னில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலெங்கா (( Aryna Sabalenka)) சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பாண்டின் கடைசி கிரான்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க விராங்கனை ஜெசிகா பெகுலாவை (( Jessica Pegula)) 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலெங்கா வெற்றி பெற்றார். அமெரிக்க ஓபன் தொடரில் கோப்பை வெல்வது தனது கனவு என்றும், தற்போது அது நடந்துள்ளது என்றும் சபலெங்கா தெரிவித்தார்.