அணு ஆயுதம் தொடர்பான பேச்சுகளில் யாராக இருந்தாலும் கவனம் அவசியம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா அருகே 2 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், இதன் மூலம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில் உள்ளது தெளிவாவதாக தெரிவித்தார்.