ரஷ்ய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நோவ்கோரோட் ((Novgorod )) பகுதியில் உள்ள புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் அனுப்பிய 91 டிரோன்களையும் இடைமறித்து தாக்கி அழித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ((Sergei Lavrov)) தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா வழக்கம் போல் பொய் பழி சுமத்தி வருவதாகவும், கீவ் மீது நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.