போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாண்டுகளை கடந்து நடக்கும் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸிக்கு, புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பேச்சுவார்த்தை துருக்கி நகரான இஸ்தான்புல்லில் 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.