உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றால் முக்கிய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், டான்பாஸ் பகுதி முழுவதையும் விட்டுக்கொடுக்க வேண்டும்.. நேட்டோவில் சேரும் எண்ணத்தை கைவிட வேண்டும்.. நடுநிலையாக செயல்பட வேண்டும்... மேற்கத்திய ராணுவ படைகளை நாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை புதின் விதித்துள்ளார்.