தாலிபான் அமைப்பு மீது 22 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்ய உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ரஷ்ய அரசின் வழக்கறிஞரின் மனுவை ஏற்று, தடை செய்யப்பட அமைப்புகள் பட்டியலில் இருந்து தாலிபானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கு இடையில் அதிகாரப்பூர்வ ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.