உக்ரைனின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது 430 ட்ரோன்கள், 18 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறிய அந்நாட்டு அதிகாரிகள் கீவ் நகரம் இதுவரை கண்ட மிகப் பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்றும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இதில் ரஷியாவின் பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், அவற்றின் சிதறல்கள் மற்றும் தீ விபத்துகள் காரணமாக கீவ் நகரில் உயரமான குடியிருப்புகள், பள்ளி, மருத்துவமனை, அரசு கட்டடங்கள் சேதமடைந்தன. 8 பேர் உயிரிழந்தனர். பொருளாதரத் தடைகள் மற்றும் ராணுவ வலிமை மூலம் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.