உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கிராமடோர்ஸ்க், இல்லினிவ்கா மற்றும் குபியன்ஸ்க் உள்ளிட்ட கிராமங்களையும் ரஷ்யா குறிவைத்து கடந்த திங்கள் கிழமை ஷெல் தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலில் கார்கிவில் இரண்டு பெண்களும், இல்லினிவ்காவில் இரண்டு நபர்களும், கிராமடோர்ஸ்க் நகரில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.