உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தடைக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் எனவும் ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், 'தேவைப்பட்டால் ஆயுதம் மூலமே ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும்' என்றும் எச்சரித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து விட்டார்.