உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா அறிவித்த மூன்று நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்று 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ரஷ்ய அதிபர் புதின், போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதன்படி இன்று தொடங்கி 10-ம் தேதி இரவு வரை 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படுகிறது.