தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள மியான்யாங் நகர காவல் துறை, ரோந்து, போக்குவரத்து மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் முதன்முறையாக ரோபோக்களை களமிறக்கியுள்ளது. காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்தை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.