மத்திய கிழக்கில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஈரான் சளைக்காமல் பதிலடி கொடுக்கும் என்பதால் முழு போராக இந்த தாக்குதல் மாறும் என கூறப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளை பெருமளவில் பாதிக்கும் என கருதி நாடுகள் அதிக கச்சா எண்ணையை இருப்பு வைக்க துவங்கி உள்ளன. இதை அடுத்து பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு சுமார் 5 டாலர் அதிகரித்து 74 புள்ளி 46 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெயும் இதே போல விலை அதிகரித்து 73 புள்ளி 15 டாலருக்கு விற்பனையானது.