அரிய தனிமங்கள் ஏற்றுமதி தொடர்பான கட்டுபாடுகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்தது. உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலிகளி ஸ்திரத்தன்மையை கூட்டாக பராமரிக்க தொடர்புடைய நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கு தயார் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.