அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்ற விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சான் அன்டோனியோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, அட்லாண்டா, டெக்சாஸின் டல்லாஸ் மற்றும் ஆஸ்டின் ஆகிய நகரங்களில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திரளானோர் பேரணி சென்றனர்.