அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.