காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்த சமூக வலைதள பதிவில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர், தனது பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ள டிரம்ப், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்சினையில் ஒரு தீர்வை எட்ட இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் நன்றி தெரிவித்த டிரம்ப்,தாக்குதலை நிறுத்தியது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்றும் கூறியுள்ளார்.