இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் பசி, பட்டினி, வறுமை காரணமாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஒரு பிரெட் பாக்கெட் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 845 ரூபாய்க்கும், சமையல் எண்ணெய் ஆயிரத்து 267 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.