கியூபா தலைநகரான ஹவானாவின் LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக பேரணியாக சென்றனர். கியூபன் தேசிய பாலியல் கல்வி மையத்தின் இயக்குநரும், முன்னாள்அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகளுமான மரியெல்லா காஸ்ட்ரோ இந்த அணிவகுப்பை வழிநடத்தினார். இதில் கியூபன் மக்கள், வானவில் வண்ண மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி கியூபன் கொங்கா இசையின் தாளத்திற்கு நடனமாடியவாறே பேரணியாக சென்றனர்.