பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை சுமந்து செல்லும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தம்பதிகள் பலர் கலந்து கொண்டு ஓடியதை ஏராளமானோர் கண்டு களித்தனர். சோன்கஜார்வியில் ((Sonkajarvi)) நடந்த இந்த போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கணவர்கள் தங்களது மனைவிகளை சுமந்துக்கொண்டு பல தடைகளை தாண்டிச் சென்று அசத்த, ஆணுக்கு பெண் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மனைவிகளும் தங்களது கணவர்களை சுமந்து சென்று அசத்தினர்.