அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் 350 நகரங்களில் பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 50501 என்ற டிரம்ப் எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள், டிரம்ப் அரசின் மோசமான கொள்கைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி முழக்கமிட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டதின்போது நகரின் மையப்பகுதியை நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர்.