அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.கொலராடோவின் போல்டரில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை திருப்பி அனுப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கையில் ஸ்ப்ரே பாட்டில்களுடன் வந்த ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெடிகுண்டு போன்ற பொருளை வீசிவிட்டு தப்பமுயன்றபோது அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனை "குறிவைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்" என்ற மத்திய புலானய்வு இயக்குனர் காஷ் படேல், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.