அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கலவரம் வெடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த குறைந்த ஆபத்தான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய படை மற்றும் யுஎஸ் மரைன்ஸ் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க குறைந்த ஆபத்துள்ள வெடிமருந்துகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது போராட்டக்காரர்களுக்கு வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.